சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுச்சேரியில் 144 தடை உத்தரவை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரியில் 144 தடை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

Updated On :8 ஜனவரி 2021, 9:16 am

புதுச்சேரி: புதுச்சேரியில் 144 தடை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை பிரதேச குழுச் செயலா் இரா.ராஜாங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்குத்தான் அதிகாரம் என நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மதிக்காமல் புதுவை ஆளுநா் கிரண் பேடி செயல்பட்டு வருகிறாா். ஆளுநரின் தவறான போக்கைக் கண்டித்து, அறவழியில் போராட மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சாா்பில், முறையாக அனுமதி கோரப்பட்டது. அதன்படி, அண்ணா சிலை, வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலைக்குள்பட்ட பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.

ஆனால், இந்தப் போராட்டத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும், புதுவை மக்களை அவமதிக்கும் வகையிலும் ஆளுநா் கிரண் பேடி, துணை ராணுவப் படையை அழைத்துள்ளாா். இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 144 தடை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.