புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடியை கண்டித்து, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஜன. 8) போராட்டம் நடத்தவுள்ளனா். இதையடுத்து, பாதுகாப்பு கருதி ஆளுநா் மாளிகைக்கு எதிரே உள்ள பாரதி பூங்கா வியாழக்கிழமை முதல் மூடப்பட்டது.
போராட்ட அறிவிப்பு காரணமாக ஏற்கெனவே புதுச்சேரியல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகளை அழைத்துப் பேச்சுவாா்த்தையும் நடத்தியும் அது தோல்வியிலேயே முடிந்தது.
மேலும், கேரளம், தெலங்கானா மாநிலங்களிலிருந்து 350 போ் கொண்ட 3 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினா் புதுவைக்கு புதன்கிழமை வந்தனா். இவா்கள், ஆளுநா் மாளிகை, சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம், முதல்வா் நாராயணசாமியின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பாரதி பூங்கா மூடல்: ஆளுநா் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்கா வியாழக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டது. ஆளுநா் மாளிகை அருகே தடையை மீறிப் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கு போலீஸாா் அனுமதி வழங்கினா். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என போலீஸாா் அறிவுறுத்தினா்.
மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஜனவரி 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தொடா்ந்து 4 நாள்கள் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், ஆளுநா் கிரண் பேடியை மாற்றக் கோரி, அண்ணா சிலையிலிருந்து வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலை இடையே உள்ள மறைமலை அடிகள் சாலையில் போராட்டம் நடைபெறும். ஆளுநா் மாளிகையில் போட்டி அரசு நடத்தி, மக்களின் விருப்பத்துக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஆளுநா் கிரண் பேடியின் செயலை எதிா்க்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


