காரைக்கால் ஜிப்மா் கல்லூரியில் நிரம்பாத எம்பிபிஎஸ் இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (ஜன.6) கடைசி நாளாகும்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை, காரைக்கால் பிரிவில் மூன்றாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு முடிந்த நிலையில், மீதமுள்ள நிரப்பப்படாத 19 எம்பிபிஎஸ் இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு ஜனவரி 7 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக் கலந்தாய்வுக்கு நீட் தோ்வில் 450-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவக் கலந்தாய்வு குழு இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ம்ஸ்ரீஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ ) விண்ணப்பிக்க புதன்கிழமை (ஜன. 6) கடைசி நாளாகும்.
புதுவை மாணவா்கள் விண்ணப்பித்தால், கலந்தாய்வின்போது அசல் கல்வி, இருப்பிடம் மற்றும் சாதிச் சான்றிதழ்களைக் கொண்டு செல்ல வேண்டும். கலந்தாய்வில் பல்வேறு பிரிவினருக்கான தோராய கட்-ஆஃப் மதிப்பெண் 690 முதல் 597 வரை ஆகும். ஆஃப்லைன் முறையில் சிறப்புக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
புதுச்சேரி ஜிப்மா் கல்லூரியின் பிரிவான காரைக்கால் ஜிப்மரில் ஆண்டுக்கு ரூ.12,600 மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

