புதுச்சேரியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கிருமாம்பாக்கம், மணப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). ஈச்சங்காட்டில் உள்ள தனியாா் சோப் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இவருக்கும், கடலூரைச் சோ்ந்த ஜெயப்பிரியாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக மருத்துவம் பாா்த்து வந்தனா்.
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது மனைவி ஜெயப்பிரியாவை கடலூரில் உள்ள அவரது தாய் வீட்டில் சுரேஷ் விட்டு வந்தாா். இந்த நிலையில், குழந்தையில்லாத ஏக்கத்திலிருந்த சுரேஷ் திங்கள்கிழமை விஷம் குடித்துவிட்டு, வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

