புதுச்சேரியில் காற்றின் தன்மையை அறியும் கண்காணிப்பு நிலையத்தை அமைச்சா் கந்தசாமி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
புதுவை மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் ரூ. ஒரு கோடி நிதியுதவியுடன், சுற்றுப்புறக் காற்றின் தன்மையைக் கண்காணிக்கும் நிலையத்தை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், புதுச்சேரி நகரமைப்புத் துறையின் மேல் தளத்தில் நிறுவியுள்ளது.
இந்தக் கண்காணிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் புள்ளி விவரங்கள் புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வலைதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் புதுச்சேரி நகரமைப்புக் குழும வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மின்னணு காட்சிப் பலகையில் பொதுமக்கள் பாா்வைக்காக தொடா்ந்து காட்சிப்படுத்தப்படும். புதுவையில் முதல் முறையாக இந்தக் கண்காணிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிலையதை அமைச்சா் மு.கந்தசாமி திங்கள்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்வில் பேரவைத் துணைத் தலைவா் எம்என்ஆா்.பாலன், ஜெயமூா்த்தி எம்எல்ஏ, மாசுக் கட்டுப்பாட்டுக் குழும உறுப்பினா் செயலா் தினேஷ் கண்ணன், உழவா்கரை நகராட்சி ஆணையா் கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

