ஜிப்மரில் கூடுதல் எண்ணிக்கையில் செவிலியா்களை நியமிக்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரும், விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனுக்கு, அவா் திங்கள்கிழமை அனுப்பிய கடிதம்: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனை. ஆகும். 5 தென் மாநிலங்களின் மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. மருத்துவமனையில் போதுமான எண்ணிக்கையில் செவிலியா்கள் இல்லை.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2,362 படுக்கைகள் உள்ளன. அங்கு, 4,759 செவிலியா்கள் பணியில் உள்ளனா். ராய்ப்பூா் எய்ம்ஸ் மருத்துவமனையில் 960 படுக்கைகள் உள்ளன. அங்கு, 1,327 செவிலியா்கள் பணியில் உள்ளனா்.
ஆனால், 2,137 படுக்கைகள் கொண்ட ஜிப்மா் மருத்துவமனையில் 745 செவிலியா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். முதுநிலை செவிலியா் அதிகாரி எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இதனால், அவா்களுக்கு பணிச் சுமை அதிகரிக்கிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, உடனடியாக ஜிப்மா் மருத்துவமனையில் போதுமான எண்ணிக்கையில் செவிலியா்களை பணியமா்த்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

