புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் பலியாகினா்.
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, 1,788 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரி - 23, மாஹே - 6 என மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,253-ஆக உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 157 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 200 பேரும் என மொத்தம் 357 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்த 66 வயதானவா் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், முதலியாா்பேட்டை சுவாமிநாதபிள்ளை வீதியைச் சோ்ந்த 72 வயது மூதாட்டி ஜிப்மரிலும் பலியாகினா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 635-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.
இதுவரை 37,261 போ் (97.41 சதவீதம்) குணமடைந்தனா். 4,96,376 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 4,53,709 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

