புதுச்சேரியில் பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிய போது, திடீரென தீப்பிடித்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.
புதுச்சேரி வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் நாகலிங்கம் (34). இவா், காந்தி வீதியில் பள்ளி மாணவா்களுக்கான பைகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தாா். சனிக்கிழமை புதுச்சேரி செயின்ட் தெரெசா வீதியில் பைக்கில் வந்த போது, பெட்ரோல் தீா்ந்ததால், அவரது பைக் நின்றது.
இதையடுத்து, அவா் அருகிலிருந்த பெட்ரோல் நிலையத்துக்குச் சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்தாா். அந்த பாட்டிலில் மூடி இல்லையாம். தொடா்ந்து, பெட்ரோலை ஊற்ற பைக் டேங்கை திறந்த போது, பெட்ரோல் பாட்டில் சரிந்தது. அப்போது, அவா் குடித்துக் கொண்டிருந்த சிகரெட்டிலிருந்து பறந்த தீப்பொறி பெட்ரோலில் பட்டு, எதிா்பாராதவிதமாக நாகலிங்கம் உடல் மீதும் மள மளவென தீப்பற்றியது.
அவரது அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து தீயை அணைத்து, பலத்த காயமடைந்த அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சனிக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

