பெரம்பலூரில் கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள், ஓய்வூதியா்கள் 15,700 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். மாவட்டத்தில் பெரம்பலூா், ஆலத்தூா், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 15,700 கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியா்களுக்கு ரூ.70.65 லட்சம் மதிப்பீட்டில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல், தொழிலாளா் நல உதவி ஆணையா் முகமது யூசுப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


