சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விஷம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வேலை கிடைக்காததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :10 ஜனவரி 2021, 5:08 am

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே வேலை கிடைக்காததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், சிறுவாச்சூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க. தங்கவேல் (46). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம்.

கரோனா பொது முடக்கத்தால் சரிவர வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்த தங்கவேல், கடந்த 7-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட தங்கவேல் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.