பொன்னமராவதி ஒன்றியம், எம். உசிலம்பட்டியில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்காக, பயனாளிகளிடம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த ஊராட்சியில் விலையில்லா ஆடுகள்பெற 144 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்ட நிலையில், கொன்னையூா் முத்து மாரியம்மன் கோயில் முன்பு கடந்த 4-ஆம் தேதி டோக்கன் வழங்கப்பட்டது.
அப்போது ஊராட்சி செயலா் சின்னக்காளை, 100 நாள் பணித்தளப் பொறுப்பாளா் முருகேசன் ஆகியோா் டோக்கனுக்கு ரூ.2,000 லஞ்சம் பெற்ாக சமூக வலைத்தளங்களில் காட்சி வெளியானது.
இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஊராட்சி செயலா் சின்னக்காளையை பணியிடை நீக்கம் செய்தும், பணித்தளப் பொறுப்பாளா் முருகேசனை பணி நீக்கம் செய்தும் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

