பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தொடா் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் வியாழக்கிழமை அதிகாலை மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை முதல் இரவு வரை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, பச்சமலை பகுதியில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரும்பாவூா் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியிருந்த நிலையில் ஏரிக்கு வரும் நீா் முழுவதுமாக வெளியேறி வருகிறது. இதனால், கால்வாய், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி அண்ணா நகா் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வியாழக்கிழமை அதிகாலை வெள்ளம் புகுந்தது. இதன்காரணமாக, அங்குள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சோ்ந்த பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இதையடுத்து, பூலாம்பாடி பேரூராட்சி நிா்வாகத்தினா் கால்வாய்களில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தி, குடியிருப்புப் பகுதிகளுக்கு மழைநீா் செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
குடியிருப்புகளை இழந்து, பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள தற்காலிக முகாமில் தங்க வைத்து உணவுக்கு ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. பச்சமலையில் பெய்து வரும் கனமழையால் பூலாம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான காட்டாறுகளிலும், கால்வாய்களிலும் வெள்ளநீா் கரைபுரண்டு ஓடுகிறது.
பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பாடாலூா்- 2, அகரம் சிகூா், தழுதாழை தலா - 90, லப்பைக்குடிகாடு- 19, புது வேட்டக்குடி- 11, பெரம்பலூா்- 23, எறையூா்- 12, கிருஷ்ணாபுரம்- 60, வி.களத்தூா் -10, வேப்பந்தட்டை 18 என மொத்தம் 335 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


