சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குடிசைமாற்று வாரிய வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு

பெரம்பலூா் அருகே கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

Updated On :9 ஜனவரி 2021, 5:13 am

பெரம்பலூா் அருகே கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் ஊராட்சியில் 5 ஏக்கா் பரப்பளவில் ரூ. 41 கோடி மதிப்பீட்டில் 504 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இத் திட்டத்தின் கீழ் பயன்பெற, பயனாளிகள் பங்களிப்புத் தொகையாக ரூ. 1.64 லட்சம் செலுத்த வேண்டும். இதன்படி, இதுவரையில் பங்களிப்புத் தொகையை முழுமையாக செலுத்திய 300-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கான பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திட்ட பயனாளிகள் தங்களது ஆதாா் மற்றும் குடும்ப அட்டை, குடும்பத்தினருடன் கூடிய புகைப்படம் மற்றும் தொகை செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றுடன் பங்கேற்றனா்.

குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளா் ஷகிலா முன்னிலையில், குலுக்கல் முறையில் 200 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

2ஆம் கட்டமாக ஜன. 11ஆம் தேதி குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெறுவதாக குடிசை மாற்று வாரிய அலுவலா்கள் தெரிவித்தனா்.