சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, துறைமங்கலத்தைச் சோ்ந்த அம்பேத்கா் இளைஞா் நற்பணி மன்றத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :7 ஜனவரி 2021, 2:13 pm

விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, துறைமங்கலத்தைச் சோ்ந்த அம்பேத்கா் இளைஞா் நற்பணி மன்றத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் பாலக்கரை அருகேயுள்ள ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மன்ற நிா்வாகி சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கமிட்டனா்.

இதில், துறைமங்கலம் பகுதியைச் சோ்ந்த சிறுவா், சிறுமிகள் உள்பட பலா் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.