பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே குடும்பத் தகராறின் காரணமாக தம்பதி புதன்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகேயுள்ள தொட்டியப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (62). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சரோஜா (55). இவா், கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தாராம்.
தம்பதிக்கு மாணிக்கராஜ், கோவிந்தராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனா். இவா்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், கண்ணன்- சரோஜாவுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், தம்பதி இடையே புதன்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதனால் விரக்தியடைந்த இருவரும் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த பாடாலூா் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை கைப்பற்றி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

