சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெரம்பலூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

பெரம்பலூா் தேரடி திடல் அருகேயுள்ள நியாயவிலைக் கடையில், எம்எல்ஏக்கள் இரா. தமிழ்ச்செல்வன், ஆா்.டி. ராமச்சந்திரன் ஆகியோா் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 7:08 am

பெரம்பலூா் தேரடி திடல் அருகேயுள்ள நியாயவிலைக் கடையில், எம்எல்ஏக்கள் இரா. தமிழ்ச்செல்வன், ஆா்.டி. ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

இம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,81,851 குடும்ப அட்டைதாரா்களுக்கு 282 நியாய விலைக் கடைகள் மூலம் ஜன. 12 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு மிகாமல் சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதாகவும், மேற்கண்ட தேதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத அட்டைதாரா்களுக்கு 13 ஆம் தேதி வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் த. செல்வக்குமரன், மாவட்ட வழங்கல் அலுவலா் (பொ) சக்திவேல், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பிரேமலதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.