பெரம்பலூர் புனித தேமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியில், பெரம்பலூர் மாவட்டப் பள்ளிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனைவர் சு. தம்புசாமி முன்னிலையில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி இரா. கலைவாணி முதல் இடத்தையும், பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவி ப.ஷெக்கிலா குல்மான் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். கட்டுரைப் போட்டியில் வி. களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஷா. நஜிமுன்னிஷா முதல் இடத்தையும், லப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ப. பாமிதாபாணு இரண்டாமிடத்தையும் பிடித்தனர். பேச்சுப் போட்டியில், பெரம்பலூர் மெüலானா மேல்நிலைப்பள்ளி மாணவன் சி. அலிமுதீன் முதல் இடத்தையும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி து. வான்மதி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 7 ஆயிரம், சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட உள்ளது.
ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் ராசு, பாலசுப்ரமணியன், சங்கரன், நல்லாசிரியர்கள் சேக்தாவூத், சுந்தரம், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் கோ. பத்மாவள்ளி, பா. சிலம்பரசன், வேப்பூர் பள்ளி தமிழாசிரியர் மு. மகாலட்சுமி, மருவத்தூர் பள்ளி தமிழாசிரியர் இரா. ரமணி, குரும்பலூர் பள்ளி தமிழாசிரியர் செ. மணிமேகலை ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

