பெரம்பலூரில், விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத இரண்டு அரசுப் பேருந்துகள் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
பெரம்பலூர் அருகே உள்ள அன்னமங்கலம் கிராமம் கோவில்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முத்து (46). கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி சேலத்தில் இருந்து பெரம்பலூர் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது, கோனேரிப்பாளையம் நிறுத்தம் அருகே பேருந்தில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், முத்து மனைவி மாரியம்மாள் மற்றும் அவரது மகன்கள் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி, பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த முத்துவின் குடும்பத்தினருக்கு ரூ. 3.91 லட்சம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் வட்டியுடன் ரூ. 4 லட்சத்து 73 ஆயிரத்து 309 வழங்க வேண்டும் எனவும், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் மாவட்ட நீதிபதி ராமசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, சேலத்தில் இருந்து பெரம்பலூர் வழியாக திருச்சி சென்ற அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
இதேபோல, பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜூ (45). இவர் அரசு விரைவுப் பேருந்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி பயணம் செய்த போது சாலை விபத்தில் உயிரிழந்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட ராஜூ மனைவி அமராவதி மற்றும் அவரது குடும்பத்தினர் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அண்மையில் விசாரித்த நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த ராஜூ குடும்பத்தினருக்கு, ரூ. 5.20 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகத்தினர் உரிய காலத்தில் இழப்பீட்டை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ. 6.59 லட்சம் வழங்கவும், அரசு விரைவு பேருந்தை ஜப்தி செய்யவும் நீதிபதி ராமசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, சென்னையில் இருந்து பெரம்பலூர் வழியாக சென்ற அரசு விரைவு பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

