சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

122 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில்,

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:33 pm

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில், 122 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையை மாநில வேளாண் விளைபொருள் விற்பனை வாரியத் தலைவர் மா. ரவிச்சந்திரன் வழங்கினார். 

நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:  72 பட்டதாரி பெண்களுக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ. 50 ஆயிரம் வீதம், ரூ. 36 லட்சமும், 10-ம் வகுப்பு முடித்த 50 நபர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம், ரூ. 12.50 லட்சமும் என மொத்தம் 122 நபர்களுக்கு ரூ.  48.50 லட்சம் மதிப்பில் உதவித் தொகையும், தலா 4 கிராம் வீதம் 488 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. அரசு திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்றார். 

மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன், ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.பி. மருதராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் சி. பிச்சைபிள்ளை, சமூக நலத்துறை அலுவலர் கி. பேச்சியம்மாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.