சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சூளாமணிச் சுருக்கம்

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணியை சுருக்கமாகத் தந்திருப்பவர் பேரறிஞர் ஒüவை துரைசாமிப்பிள்ளை. இந்நூலின் அணிந்துரையே ஓர்

Updated On :22 ஏப்ரல் 2013, 8:39 am

சூளாமணிச் சுருக்கம் - ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை; பக்.192; ரூ.100; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17; )044-2433 1510.

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணியை சுருக்கமாகத் தந்திருப்பவர் பேரறிஞர் ஒüவை துரைசாமிப்பிள்ளை. இந்நூலின் அணிந்துரையே ஓர் ஆராய்ச்சி உரையாகத் திகழ்கிறது. 

நாட்டுச் சருக்கம் தொடங்கி முத்திச் சருக்கம் ஈறாக 12 சருக்கங்களையும், 2131 விருத்தப்பாக்களையும், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை பயனையும் கொண்டது. பாரத கண்டத்தின் வடபகுதியில் உள்ள சுரமை நாட்டில் நல்லாட்சி புரியும் பயாபதிக்கு, மகாபதி, சசி என இரு மனைவியர். அவர்தம் பிள்ளைகள் விஜயன், திவிட்டன். ஒருநாள் மன்னன் பயாபதி, விண்ணுலகிலிருந்து வந்த யானை, ஒளிமிக்க மாலை ஒன்றை இளவரசன் திவிட்டனுக்கு அணிவிப்பதாகக் கனவு காண்கிறான். மன்னன் கண்ட கனவை விதர்ப்ப நாட்டு நிமித்தன் அப்படியே தனது ஆற்றலால் கூற, மன்னன் வியப்படைகிறான். கண்ட கனவின் படி திவிட்டனுக்கு வித்தியாதரப் பெண்ணே மனைவியாவாள் என்று நிமித்தன் கூற, அதன்படியே, மண்ணுலக இளவரன் திவிட்டனும் விண்ணுலக (வித்யாதரர் உலக) இளவரசி சுயம்பிரபையும் காதல் கொள்கின்றனர். திருமண ஏற்பாடுகள் நடக்கும் நேரத்தில் வில்லனாகிறான் அச்சுவக்கண்டன். திவிட்டன் அச்சுவக்கண்டனுடன் போர்புரிந்து சுயம்பிரபையை மணப்பதே கதை. இறுதியில், மன்னன் பயாபதி துறவு பூண்டு மக்கள் மனதில் சூளாமணியாகத் திகழ்வதில் முடிகிறது கதை.

"திருத்தக்கதேவர் சீவகசிந்தாமணியைப் பாடி முடிந்த பிறகு, தோலாமொழித் தேவர் சூளாமணியைப் பாடினார் என்றும், முன்னதன் தாக்கம் இதிலிருப்பினும் சில இடங்களில் இது முன்னதினும் மேம்பட்டு விளங்குகிறது' என்று மு.வ. கூறியிருப்பது முற்றிலும் உண்மை.