சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குகை மனிதனும் கோடி ரூபாயும்

பொருளாதாரமும், உளவியலும் இணைந்த "பொருளாதாரச் செயலியல்' (Behavior Economics) என்னும் துறை தமிழில் அதிகம் எழுதப்படாத விஷயமாக

Updated On :22 ஏப்ரல் 2013, 8:39 am

குகை மனிதனும் கோடி ரூபாயும் - பி.பாலசுப்ரமணி; பக்.152; ரூ.100; சந்தியா பதிப்பகம், சென்னை-83; )044 - 2489 6979.

பொருளாதாரமும், உளவியலும் இணைந்த "பொருளாதாரச் செயலியல்' (Behavior Economics) என்னும் துறை தமிழில் அதிகம் எழுதப்படாத விஷயமாக இருந்த குறையை நீக்கியுள்ளது இந்த நூல்.

சிந்தனையிலும், அறிவிலும் இன்றைய மனிதர்கள் பல உச்சங்களை எட்டிவிட்டாலும், பணத்தைக் கையாளுவதில் குகைகளில் வாழ்ந்த ஆதிமனிதர்களின் குணமே இப்போதும் மேலோங்கி இருக்கிறது என்று கூறும் நூல்.

 பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது சாலையே இல்லாத ஊருக்கு காற்றே இல்லாத  டயர் மாட்டிய வண்டியில் மிக வேகமாகச் செல்வது போன்று தூக்கி தூக்கி போடக்கூடியது  என்பது ரசனைக்குரிய உவமை.

 மனித மனம் ஒரு வளமான நிலம். ஏதாவது ஒரு கருத்து அதில் விதையாக விழுந்துவிட்டால், அது பெரும்பாலும் அழிவதில்லை. தகுந்த சூழ்நிலை ஏற்படும்போது மெல்ல மெல்ல மேலே வந்துவிடும். பின்னர் அதுவே நமது புத்தியின் ஒரு பகுதியாக மாறிவிடும். மனிதர்களின் பொருளாதார கணக்கீடுகள் பெரும்பாலும் இந்த புத்தியின் அடிப்படையிலும், ஆழ்ந்த நம்பிக்கையின் மீதும்தான் அமைகிறது என்பது தெளிவுபட விளக்கப்பட்டுள்ளது. பொருத்தமான திருக்குறளும், அதன் விளக்கமும் நூலில் இடம் பெற்றுள்ளது கூறப்படும் கருத்துகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.