சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 4:39 am

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரையில் 17,479 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 27 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 17,506ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 226 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 24 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் தற்போது வரையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 17,060ஆக அதிகரித்துள்ளது.