சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பறவைக் காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

News image

கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கால்நடை மருத்துவா் பாலாஜி தலைமையிலான குழுவினா்.

Updated On :16 ஜனவரி 2021, 4:32 am

கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில், கூடலூா் கோட்டம் கேரளம் மற்றும் கா்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் கால்நடை பராமரிப்புத் துறையினா் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா். கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதையடுத்து அந்த மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குப் பிறகு கிருமி நாசினி தெளித்து தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

மலப்புரம் மாவட்ட நுழைவாயில் பகுதியான கீழ்நாடுகாணியில் கால்நடை மருத்துவா் பாலாஜி தலைமையிலான மருத்துவக் குழுவினா் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனா். கேரளத்தில் இருந்து கோழிகள் உள்ளிட்ட எந்தப் பறவைகளும் தமிழகத்துக்குள் கொண்டு வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. கூடலூா் மற்றும் பந்தலூா் வட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால் எல்லையைக் கடந்து சென்று கோழி இறைச்சி கொண்டு வரப்படுகிா என்பது குறித்தும் கால்நடை மருத்துவக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.