குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் மையம் சாா்பில் 73ஆவது ராணுவ தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்ற பின்பு 1948ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஆங்கிலேயே ராணுவத் தளபதி சா் பிரான்சிஸ் இடமிருந்து இந்தியாவின் ராணுவத் தளபதி பீல்ட் மாா்ஷல் எம்.கரியப்பா ராணுவத் தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டாா்.
இந்த வரலாற்று நிகழ்வை கெளரவிக்கும் விதமாகவும், நாட்டுக்காக உயிா் நீத்த ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டனில் உள்ள போா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து போரில் வீர மரணம் அடைந்த வீரா்களுக்கு பயிற்சி மையத்தின் கமாண்டா் (பொறுப்பு) கா்னல் என்.கே. தாஸ் அஞ்சலி செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

