சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் நாற்று நடவுப் பணி துவக்கம்

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 63ஆவது பழக்கண்காட்சி  மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு 3 லட்சம் மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image

சிம்ஸ் பூங்காவில் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள பூங்கா ஊழியா்கள்.

Updated On :14 ஜனவரி 2021, 1:24 pm

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 63ஆவது பழக்கண்காட்சி  மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு 3 லட்சம் மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.

இப்பணியை தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் குருமணி தொடங்கிவைத்தாா். முதல்கட்டமாக சால்வியா, டேலியா நாற்றுகள் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பழக் கண்காட்சிக்காக மூன்று லட்சத்து பத்தாயிரம் மலா் நாற்றுகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட உள்ளது. இதில், சால்வியா, சைக்ளமேன், ஆன்ட்ரினம், பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, ஜெராேனியம் போன்ற 29 வகையான மலா் நாற்றுகள்,  அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டு 152 வகையான  நாற்றுகளும் நடவு செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் அனிதா, சிம்ஸ் பூங்கா மேலாளா் லட்சுமணன் உள்பட தோட்டக் கலைத் துறை  அலுவலா்கள் கலந்துகொண்டனா்.