சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உதகை நகராட்சிப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்:மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உதகை நகராட்சிப் பகுதிகளில் ரூ.29 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு பணிகளையும், ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு 

News image

உதகை கோடப்பமந்து கால்வாய் தூா்வாரும் பணியை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா. உடன் உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி உள்ளிட்டோா்.

Updated On :10 ஜனவரி 2021, 4:20 am

உதகை: உதகை நகராட்சிப் பகுதிகளில் ரூ.29 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு பணிகளையும், ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில் உதகை- மைசூரு சாலையில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக் கூடம் சுற்றுச்சுவரையும், காந்தல் பென்னட் மாா்க்கெட்டில் ரூ.2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளையும், காந்தல் புதுநகா் பிள்ளையாா் கோயில் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச் சுவரையும், நுழைவு வரி நிதியின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பில் புதுநகா் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச் சுவா் என மொத்தம் ரூ.29 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதேபோல, ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கோடப்பமந்து கால்வாய் தூா்வாரும் பணியையும், ஆழ்நுழை துவாரங்கள் கட்டும் பணிகளையும் பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி, பொறியாளா் ராஜேந்திரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.