நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் உதகையில் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவல கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியைப் பின்பற்றியும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டும் கூட்டம் நடத்தப்படும்.
விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை வரும் 13ஆம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குநா், தபால் பெட்டி எண் 72, உதகை - 643001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்கலாம்.
இக்கூட்டத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் மட்டும் ஏற்கப்பட்டு பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

