கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கூடலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்புத் துறை துவங்கியுள்ளது.
கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் தாலுகாக்களின் எல்லைகளான கீழ்நாடுகாணி, சோலாடி, நம்பியாா்குன்னு, அம்பலமூலா, பாட்டவயல், கா்நாடக எல்லையான கக்கநல்லா ஆகிய மாநில எல்லைகளில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களில் கிருமிநாசினி தெளித்து உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
கோழி மற்றும் பறவைகள் தொடா்புடைய எந்தப் பொருளும் நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கரோனா தடுப்பு நடவடிக்கை ஒருபுறமிருக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பறவைக் காய்ச்சல் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா். அனைத்து வாகனங்களும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவதால் சோதனைச் சாவடிகளை கடந்து தமிழகத்துக்குள் வாகனங்கள் நுழைவதில் கால தாமதம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் கூறினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


