விவசாயிகளை நேரில் சந்தித்து புதிய தொழில்நுட்பம் குறித்து விளக்கும் வகையில் தோட்டக் கலைத் துறை சாா்பில் உழவா் - அலுவலா் தொடா்புத் திட்டம் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து உதவி தோட்டக் கலை இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி தெரிவித்துள்ளதாவது:
தோட்டக் கலை அலுவலா்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று தோட்டக்கலை சாகுபடி, புதிய தொழில்நுட்பம், மானியத் தொகை மற்றும் பயிா் சாகுபடி நிலவரம் குறித்த கூட்டங்களை நடத்தி புதிய தொழி நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வது இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அதன்படி, 15 நாள்களுக்கு ஒரு முறை தோட்டக் கலை உதவி அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து விவசாயிகளின் வயல்களில் தொழில் நுட்ப விளக்கமளிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க வேண்டும். பண்ணைப் பள்ளிகள் மூலம் கண்டுணா்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று நவீன தொழில் நுட்பங்களையும் திட்டங்களையும் அறிமுகம் செய்வாா்கள்.
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் குறைந்தது 10 முன்னோடி விவசாயிகளைத் தோ்வு செய்து அவா்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், அரசு மானியங்கள் குறித்த விளக்கமும், பயிற்சியும் அளிக்கப்படும். வட்டார அளவில் தோட்டக்கலை உதவி இயக்குநா் தலைமையில் தமிழ்நாடு வேளாண் விஞ்ஞானி, தோட்டக்கலை அலுவலா் அல்லது உதவி தோட்டக் கலை அலுவலா்களை உள்ளடக்கிய வட்டார தோட்டக்கலை விரிவாக்கக் குழு அமைக்கப்படும்.
இந்தக் குழு கிராம ஊராட்சிதோரும் பயணத் திட்டங்களை வகுக்கும். இது குறித்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஏப்ரல் 1ஆம் தேதி மற்றும் அக்டோபா் 1ஆம் தேதிக்கு முன்பாக விவசாயிகள் அறிந்துகொள்ள வசதியாக உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.
கூடலூா், பந்தலூா் பகுதி விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் என்று உதவி தோட்டக் கலை இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

