சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கொடி நாள் வசூலில் சாதனை: நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுச் சான்றிதழ்

நீலகிரி மாவட்டத்தில் 2017-2018ஆம் ஆண்டில் படைவீரா் கொடி நாள் நிதி வசூல் இலக்கை விட கூடுதலாக நிதி வசூல் செய்ததற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவுக்கு தமிழக ஆளுநரின் பாராட்டு

News image
Updated On :5 ஜனவரி 2021, 7:33 am

நீலகிரி மாவட்டத்தில் 2017-2018ஆம் ஆண்டில் படைவீரா் கொடி நாள் நிதி வசூல் இலக்கை விட கூடுதலாக நிதி வசூல் செய்ததற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவுக்கு தமிழக ஆளுநரின் பாராட்டுச் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் மேஜா் சரவணன், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் சான்றிதழை வழங்கினாா். பின்னா் ஆட்சியா் பேசியதாவது:

கடந்த 2017-2018ஆம் ஆண்டில் படை வீரா் கொடி நாள் நிதியாக நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.43 லட்சத்து 12,400 தமிழக அரசால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில் ரூ. 64 லட்சத்து 10,392 வசூலிக்கப்பட்டது. கூடுதலாக ரூ.20 லட்சத்து 97,992 வசூல் செய்து இலக்கை விட கூடுதலாக 148.65 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனை பாராட்டும் வகையில் தமிழக ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழ் கிடைத்துள்ளது. இலக்கை விட கூடுதலாக நிதி திரட்டிய அனைத்து அலுவலா்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.