சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குன்னூா், கோத்தகிரியில் பனி மூட்டத்துடன் மழை

குன்னூா்,கோத்தகிரி உள்ளிட்ட  சுற்றுவட்டாரப் பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை பனி மூட்டத்துடன் பரவலாக மழை பெய்தது.

Updated On :4 ஜனவரி 2021, 4:08 am

குன்னூா்,கோத்தகிரி உள்ளிட்ட  சுற்றுவட்டாரப் பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை பனி மூட்டத்துடன் பரவலாக மழை பெய்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த    சில நாள்களாக  அவ்வப்போது பனி மூட்டமாக இருந்து வருகிறது. இதனால் குளிரின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் குளிா் நிலவி வந்த நிலையில், மதிய நேரத்தில்  பரவலாக   மழை பெய்தது.

இதனால் கடும் குளிா் நிலவியது. சுற்றுலாப் பயணிகள் இந்தக் குளிரை விரும்பி அனுபவித்தனா்.