பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

ஹமாஸ் தனது பிடியில் இருந்த அமெரிக்கர்கள் இருவரை கடந்த வாரம் விடுவித்திருந்த நிலையில், நேற்று மேலும் இரண்டு பெண்களை விடுவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட பெண்கள் இருவரும் வயது முதுமை மற்றும் உடல்நிலை காரணமாக விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், நூரிட் கூப்பர் (79), யோச்சீவ்டு லிஃப்ஷிட்ஸ் (85) இருவரும் பத்திரமாக டெல் அவிவ் நகரை அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் தனி ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பெண்களும் இஸ்ரேல் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, இருவரையும் ஹமாஸ் படையினர் பத்திரமாக அழைத்துவரும் காட்சிகளும், இறுதியாக, ஹமாஸ் படையினருக்கு, விடுவிக்கப்பட்ட பெண் ஒருவர் கைகொடுக்கும் விடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இருந்து ஹமாஸ் ஆயுதப் படையினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியல் 1,400 பேர் உயிரிழந்தனர்.
கத்தார் அரசின் பேச்சுவார்த்தைக்குப் பின் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நாட்டாலி ரானன் இருவரும் 14 நாள்களுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் இஸ்ரேல் திரும்பியிருந்தனர். அவர்களது உடல் நிலை குறித்த தகவல்கள் எதுவுமில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், விடுவிக்கப்பட்ட இரண்டு பேரிடமும் அலைபேசி வழியாகப் பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
கத்தார் மற்றும் எகிப்து, குடிமக்களை விடுவிக்கக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை, ஹமாஸ் எடுத்து வருவதாகவும் இன்னும் நிறைய பேர் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
காஸாவின் எல்லையில் விடுவிக்கப்பட்ட இருவரையும் இஸ்ரேல் இராணுவம் மீட்டு மத்திய இஸ்ரேல் இராணுவத் தளத்திற்கு கொண்டு சென்றனர்.
இஸ்ரேலில் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்த தாயும் மகளும் அக்.7 இஸ்ரேலின் எல்லையில் கிபூஸ் பகுதியில் ஹமாஸ் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டனர்.
கத்தார் அரசின் சமரச முயற்சியின் பலனாக, மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கப் பெண்கள் இருவர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இஸ்ரேலியர்கள், இரட்டை குடியுரிமை உள்ளவர்கள், வெளிநாட்டினர் என 203 பேர் ஹமாஸ் பிடியில் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இதில் கிட்டதட்ட 20 பேர் குழந்தைகள் மற்றும் 10 முதல் 20 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


