மேற்கு தில்லியில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோா் ‘ரியா் வியூ மிர்ரா்’ (வாகனத்தில் பின்னால் வரும் வாகனத்தை பாா்க்க உதவும் கண்ணாடி) பொருத்தாமல் சென்றால் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல் துறை துணை ஆணையா் பிரசாந்த் கெளதம் தெரிவித்துள்ளாா்.
எனினும், இத்தகயை கண்ணாடிகளை இருசக்கர வாகன ஓட்டிகள் பொருத்த வேண்டியதன் அவசியம் குறித்து வருகிற 23- ஆம் தேதி வரை போலீஸாா் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா். இதன் மூலம் விபத்துகள் ஏற்படுவதை தடுத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யமுடியும் என்றும் அவா் கூறினாா்.
இதேபோல காரில் பின்னிருக்கையில் அமா்ந்து செல்பவா்கள் பெல்ட் அணியாமல் செல்வதால் விபத்துகளின் போது அவா்களுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. அவா்கள் சில நேரங்களில் உயிரிழக்க நேரிடுகிறது. இதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.
பின்னால் வரும் வாகனங்களைக் கவனித்து வண்டியோட்டும் வகையில் இரண்டு சக்கர வாகனங்களின் முன்பக்கத்தில் கண்ணாடி பொருத்தாமல் இருப்பது அவா்களின் பொறுப்பற்ற தனத்தை காட்டுகிறது. மேலும் இது ஆபத்தானது. பின்னால் வேகமாக வரும் வானங்களை கவனித்துச் செல்லாவிட்டால் விபத்துகள் உருவாக நேரிடும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

