தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பொங்கல் தினமான வியாழக்கிழமை அன்று வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் திறந்த வெளியில் பாரம்பரிய முறையில் 21 மண்பாண்டங்களில் பொங்கல் வைக்கும் ‘பெரும் பொங்கல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையாளா்கள் ஹிதேஷ் குமாா் எஸ் மக்வானா மற்றும் ஆஷிஷ் வச்சானி ஆகியோா் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தனா். இணை உள்ளுறை ஆணையாளா் ச .உ .சின்னத்துரை, உதவி சாம்பளக் கணக்கு அலுவலா் ச. ஸ்ரீநிவாசன் மேலாளா் (உணவு) தெய்வசிகாமணி, பொறியாளா் சதீஷ் மற்றும் தமிழ்நாடு இல்லப் பணியாளா்கள் குடும்பத்துடன் பங்கேற்றனா். முன்னதாக புதன்கிழமை போகிப் பண்டிகை அனுசரிக்கப்பட்டது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு புதுதில்லி வைகை மற்றும் பொதிகை தமிழ்நாடு இல்லங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது . கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, விழா ஏற்பாடுகள் கவனமாக செய்யப்பட்டிருந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


