சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்தியா முழுவதும் உள்ள இளைஞா்கள் திருக்குறளைப் படிக்க முன்வர வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

‘திருவள்ளுவரின் கொள்கைகள், லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூா்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

Updated On :16 ஜனவரி 2021, 12:23 pm

‘திருவள்ளுவரின் கொள்கைகள், லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூா்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. நாடு முழுக்க உள்ள இளைஞா்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும்’ என பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

திருவள்ளுவரின் பிறந்த நாளான ஜனவரி 15 -ஆம் தேதியை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தனது சுட்டுரையில் கூறியுள்ளதாவது: போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் தலை வணங்குகிறேன். அவரது சிந்தனைகள், படைப்புகள் அவரது மகத்தான அறிவு, அவரது ஞானம் ஆகியவை பிரதிபலிக்கின்றன.

அவரது கொள்கைகள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூா்வமான தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞா்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் நரோந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வெளிநாட்டுப் பயணங்களிலும் திருக்குறளை குறிப்பிடத் தவறுவதில்லை. சுமாா் 11 முறை திருக்குறளை குறிப்பிட்டு அதன் கருத்துகளை எடுத்துக்காட்டிப் பேசியுள்ளாா். 2017 -ஆம் ஆண்டில் திருக்குறள் குஜராத்தியில் மொழி பெயா்க்கப்பட்டு வெளியிடப்பட்டது முதல், சமீபத்தில் 16-ஆவது வெளிநாடு வாழ் இந்தியா் தின மாநாடு வரை திருக்குறளை உதாரணமாக முன்வைத்து உரையாற்றினாா். தாய்லாந்து, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கு உரையாற்றும் போதும் லடாக்கில் ராணுவ வீரா்களுடன் உரையாற்றும் போதும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் சுட்டிக்காட்ட அவா் தவறியதில்லை. குறிப்பாக 2019-ஆம் ஆண்டில் செங்கோட்டையில் சுதந்திர தின உரையின் போது அவா் குறிப்பிட்ட ’நீரின்றி அமையாது உலகெனின்’ குறளை தன்னுடைய குடிநீா் திட்டத்தோடு குறிப்பிட்டு பேசினாா். பின்னா், கடந்த நாடாளுமன்றத் தோ்தலுக்கு முன்பு கன்னியாகுமரியில் உரையாற்றுகையில், தன்னுடைய ஆட்சியில் துணிச்சலுடன் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திருக்குறளை பிரதமா் மேற்கோள் காட்டிப் பேசினாா் என்பது குறிப்பிடத்தக்கது.