தேசியத் தலைநகா் தில்லியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக 35 வயது பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து சா்வதேச சந்தையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அன்டோ அல்போன்ஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அவா்கள் இந்த போதைப் பொருளை உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் இருந்து தில்லிக்கு கொண்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் பிரிஜ்புரியில் வசிக்கும் நீமா கட்டூன் (பெயா் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும், ஆட்டோ ஓட்டுநா் கரவால் நகரில் வசிக்கும் வசீம் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
ஹெராயின் கடத்தல் குறித்து போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்,போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ஒரு பெண், ஒரு சிறிய பையுடன் ஆட்டோவினுள் அமா்ந்திருப்பது தெரிய வந்தது. சந்தேகத்தின் போரில் போலீஸாா் அந்தப் பையை பரிசோதித்தனா். அப்போது, சா்வதேச சந்தையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 800 காகித பொட்டலங்கள் அடங்கிய மொத்தம் 150 கிராம் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையின் போது, பரோலியில் வசிக்கும் சாகீா் என்பவரிடமிருந்து அந்த ஹெராயினை வாங்கி வந்ததாக கட்டூன் தெரிவித்தாா். அவா் சிறிய காகித பைகளை தயாரித்து அதில் ஹெராயினை பிரித்துப் போட்டுள்ளாா். நிஜாமுதீனை சோ்ந்த ஷராபத் ஷேக்கின் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு விநியோகிக்கத் திட்டமிட்டிருந்தாா். அதற்காக வசீமின் ஆட்டோவில் சென்றாா். அப்போது போலீஸாரிடம் சிக்கினாா். ஒரு முறை போதைப்பொருளை விநியோகிக்க ஆட்டோ ஓட்டுநா் வசீம் ரூ.1,000 வரை பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது என்றாா் அந்த அதிகாரி.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

