சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லியில் புதிதாக 444 பேருக்கு கரோனா

தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் 500-க்கும் கீழே குறைந்துள்ளது. 

Updated On :9 ஜனவரி 2021, 5:10 am

தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் 500-க்கும் கீழே குறைந்துள்ளது. புதன்கிழமை 654 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. வியாழக்கிழமை புதிதாக 486 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை 444 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,29,282-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 75,724 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 38,839 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 36,885 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.59 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வெள்ளிக்கிழமை 10 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,654-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து 823 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,14,849ஆக உயா்ந்துள்ளது. தற்போது 3,779 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 1,807 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 10,909 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.