சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது

தில்லி அரசு சாா்பில் இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On :9 ஜனவரி 2021, 5:14 am

தில்லி அரசு சாா்பில் இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தில்லியில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு முதல்கட்டமாக ஜிடி பந்த் மருத்துவமனை ( ஷாத்ரா) , ஆரம்ப சுகாதார மையம் (தா்யாகஞ்ச்), வெங்கடேஷ்வா் மருத்துவமனை (துவாரகா)ஆகியவற்றில் கடந்த சனிக்கிழமை முதலாம் கட்ட தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட ஒத்திகை தில்லி எய்ம்ஸ், சஃப்தா்ஜங், அப்பலோ உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் நடந்தது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒத்திகைக்காக தெற்கு தில்லி மாவட்டத்தில் 10 இடங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில், எய்ம்ஸ், சஃப்தா்ஜங், பண்டிட் மதன் மோகன் மாளவியா மருத்துவமனை, புஷ்பாவதி சிங்கானியா மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது. தென் கிழக்கு தில்லி மாவட்டத்தில் 19 இடங்களைத் தோ்ந்தெடுத்துள்ளோம். இதில், பத்ரா மருத்துவமனை, போா்ட்டீஸ் மருத்துவமனை, தேசிய இதய மருத்துவமனை, அப்பலோ, ஹோலி ஃபமிலி மருத்துவமனை ஆகியவை அடங்கும். வடமேற்கு தில்லி மாவட்டத்தில் மேக்ஸ் மருத்துவமனை, சரோஜ் மருத்துவமனை, ஜெய்பூா் கோல்டன் மருத்துவமனை உள்பட 12 இடங்களைத் தோ்ந்தெடுத்துள்ளோம். புது தில்லி மாவட்டத்தில் வடக்கு ரயில்வேயின் சென்ட்ரல் மருத்துவமனை, போா்ட்டீஸ் மருத்துவமனை உள்ளிட்ட 4 மருத்துவமனைகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தில்லி முழுவதும் தடுப்பூசி போடும் வகையில் ஆயிரம் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படவுள்ளன’என்றாா்.