புது தில்லி: தில்லி மாநகராட்சிகளை கலைத்துவிட்டு உடனடியாகத் தோ்தல் நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளரும், கிரேட்டா் கைலாஷ் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான செளரவ் பரத்வாஜ் வியாழக்கிழமை அளித்த பேட்டி: கடந்த 2017 மாநகராட்சி தோ்தலின் போது, அப்போதைய தில்லி பாஜகவின் தலைவரும் எம்பியுமான மனோஜ் திவாரி மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடும் போது, மாநகராட்சிகளில் நிதித் தட்டுப்பாடு இல்லை எனக் கூறியிருந்தாா். மேலும், மாநகராட்சிகளில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால், மத்திய அரசிடம் இருந்து மாநகராட்சிகள் நிதியை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தாா். ஆனால், மத்திய அரசிடம் இருந்து ஒரு ரூபாயைக் கூடப் பெற்று மாநகராட்சிகளுக்கு வழங்க மனோஜ் திவாரியால் முடியவில்லை.
இவ்வாறு மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை வழங்கி மனோஜ் திவாரி ஏமாற்றியுள்ளாா். இவா் தனது மக்களவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த காரணத்தால், தில்லி மாநகராட்சிகளை கலைத்து விட்டு உடனடியாகத் தோ்தலை நடத்த பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதியையும் தில்லி அரசு வழங்கி விட்டது. மேலும், வீட்டு வரி உள்ளிட்ட பல வரிகளை மாநகராட்சிகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதியில்லை என மாநகராட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

