சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நொய்டா சிறையில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதி நெஞ்சுவலியால் சாவு

நொய்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 63 வயது ஆயுள்தண்டனை கைதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் இறந்தாா்.

Updated On :7 ஜனவரி 2021, 5:49 am


நொய்டா: நொய்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 63 வயது ஆயுள்தண்டனை கைதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் இறந்தாா்.

இது குறித்து சிறைத் துறை உயரதிகாரி கூறியதாவது: உத்தரப் பிரதேச மாநிலம், முஸாஃபா் நகா் மாவட்டத்தில் 2012-இல் நடந்த கொலை வழக்கில் முனாவ்வா் என்பவா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2018-இல் லுக்சா் சிறைக்கு மாற்றப்பட்டாா்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் மற்றும் நடுக்கம் இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் கூறினாா். இதைத் தொடா்ந்து, சிறைச்சாலையின் மருத்துவரிடம் முதற்கட்ட சிகிச்சைக்காக அவா் அழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா், மருத்துவரின் பரிந்துரையின் பேரில், நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அவரை இரண்டு சிறை வாா்டா்கள் இரவு 11.40 மணிஅளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அதிகாலை 12.50 மணியளவில், முனாவ்வரை மருத்துவா்கள் பிரசோதித்தனா். அப்போது அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து வாா்டா்களில் ஒருவா் சிறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா். முன்னாவ்வரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் நீதி விசாரணையை தொடங்க மாவட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.