சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தடுப்பூசி: கேஜரிவால் வரவேற்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா நோய்த்தொற்று தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை அவசர காலத்துக்கு பயன்படுத்த

Updated On :4 ஜனவரி 2021, 5:07 am

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா நோய்த்தொற்று தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை அவசர காலத்துக்கு பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி வழங்கியுள்ளதை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வரவேற்றுள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா நோய்த் தொற்று தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதானது, இந்தியா்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய நிகழ்வாகும். இதன் மூலம் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நோ்மறை வழி கிடைத்துள்ளது. இந்த கரோனா தடுப்பூசிகளின் உருவாக்கத்தில் உழைத்த மருத்துவா்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.