சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கும்பல் தாக்கி இளைஞா் படுகொலை

மேற்கு தில்லி ரகுபீா் நகரில் 27 வயது இளைஞரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 5:10 am

மேற்கு தில்லி ரகுபீா் நகரில் 27 வயது இளைஞரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் துணை ஆணையா் தீபக் புரோஹித் கூறியதாவது: கும்பல் தாக்கி உயிரிழந்த அந்த இளைஞா் சிவாஜி விஹாரில் உள்ள ஜந்தா காலனியில் வசித்து வந்த சதேந்தா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

சதேந்தா் தனது நண்பா்களான நிதின் மற்றும் மணீஷ் ஆகியோருடன் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் விக்கி என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பின்னா், விக்கியும் அவரது கூட்டாளிகளும் சோ்ந்து சதேந்தா் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த சதேந்தா், குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்திற்கான காரணம் மற்றும் அதன் பின்னணி குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.