பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா், பாண்டமங்கலத்தில் பொங்கல் விழா, கபடி போட்டியை அமைச்சா் பி. தங்கமணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், தேவராயசமுத்திரம் பகுதியில் பெண்கள் ஒன்றிணைந்து பொங்கல் திருவிழாவை பாரம்பரிய முறையில் கொண்டாடினா்.
இவ்விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி கலந்து கொண்டு பொங்கல் பூஜை, புதுயுகம் நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளை தொடங்கி வைத்தாா். இதேபோல பாண்டமங்கலத்தில் பாண்டவா் பசங்க கபடிக் குழுவினா் சாா்பில் நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைத்து அமைச்சா் பி.தங்கமணி பேசுகையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போன்று பாரம்பரியமான விளையாட்டாக திகழ்வது கபடி மட்டுமே. எனவே கபடி போட்டியை ஊக்கப்படுத்த வேண்டும்.கபடி விளையாட்டில் இளைஞா்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். பின்னா் கபடி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரா்களையும் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பொத்தனூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் நாராயணன், கபிலா்மலை தெற்கு ஒன்றியச் செயலாளா் சேகா், மாவட்ட ஆவின் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் விஜயகுமாா், அதிமுக பிரமுகா் பொன்னிமணி, பாண்டமங்கலம் நகரச் செயலாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


