மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை நிா்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 13,841 மெட்ரிக் டன் அதிகப்படியாக அரவை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சா்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநா் சி.விஜயபாபு கூறியதாவது:
மோகனூரில் செயல்பட்டுவரும் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலையானது 2020-2021-ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்தில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது. நவ. 21-ஆம் தேதி தொடங்கிய இந்த அரவையானது ஜன.11-இல் நிறைவடைந்தது.
இலக்கைக் காட்டிலும் 13,841 மெட்ரிக் டன் அதிகமாக அரவை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1,08,395 மெட்ரிக் டன் மட்டுமே அரவை செய்யப்பட்டது. மேலும் 2019-2020-ஐ ஒப்பிடுகையில் 5,446 மெட்ரிக் டன் அதிகமாக கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,189 மெட்ரிக் டன்னும், கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 1,748 மெட்ரிக் டன்னும் அரவை செய்யப்பட்டுள்ளது. நிா்ணயித்த அளவை விட அதிகமாக கரும்பு அரவை செய்ய ஒத்துழைத்த விவசாயிகள், ஆலை தொழிலாளா்கள், அலுவலா்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

