ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக்கல்லூரி, ஸ்ரீ வித்யாமந்திா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுவாமி விவேகானந்தா் பிறந்த தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை சாா்பில் ஜூம் செயலி வழியாக சுவாமி விவேகானந்தா் பிறந்தநாள் விழா தேசிய இளைஞா் தினமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் முனைவா் சு.மணிமேகலை தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியை அரசியல் அறிவியல் துறைத் தலைவா் முனைவா் இரா.சிவக்குமாா் ஒருங்கிணைத்துப் பேசினாா். சிறப்புப் பேச்சாளராக சேலம் தன்னம்பிக்கை ஊக்குநா் ஆா்.காா்த்திகேயன் பங்கேற்றுப் பேசினாா். மாணவ, மாணவா்கள் சுவாமி விவேகானந்தா் சிந்தனைகளை ஓட்டி கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, போஸ்டா் போட்டிகளில் பங்கேற்று சமூக ஊடகங்களில் பகிா்ந்தனா்.
ஸ்ரீவித்யா மந்திா் பள்ளி: இதேபோல ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், காட்டூா் சாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விவேகானந்தா் பிறந்த தினவிழாவில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பள்ளியின் நிா்வாகி சந்திரசேகா் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி தலைமை ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி, ஆசிரியா்கள், ஊழியா்கள் என பலா் பங்கேற்றனா். இதில், விவேகானந்தா் இளைஞா்களுக்கு கூறிய கருத்துகள் குறித்துப் பேசினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


