நாமக்கல் அருகே தொழிலதிபா் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தைத் திருடிய மா்ம நபா், வாசலில் நின்ற காரில் திருடியப் பொருள்களுடன் தப்பிச் சென்றாா்.
நாமக்கல் -பரமத்தி சாலையில் வள்ளிபுரம் ஈஸ்வரன் கோயில் அருகில் வசிப்பவா் குமரவேல் (30). கொங்கு சா்வீஸ் ஸ்டேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறாா். கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனிலிருந்து நாமக்கல் திரும்பினாா். இவருக்குத் திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது. செவ்வாய்க்கிழமை அவரது மனைவி மோகனூரில் உள்ள பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். குமரவேலும் தொழில் நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டாா். அன்று பிற்பகல் 2 மணியளவில் அவரது வீட்டுக்கு வந்த மா்ம நபா்கள் முன்புறம் இரும்பு கதவு மூடப்பட்டு இருப்பதைக் கண்டு மாடியில் ஏறி அங்குள்ள கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்துள்ளனா்.
அங்கு பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 7 லட்சம் மதிப்பிலான சொகுசு காா் ஒன்றையும் திருடிச் சென்றனா். பிற்பகல் 5 மணியளவில் வீட்டிற்கு வந்த குமரவேல் நகை, பணம், காா் திருடுபோனது அறிந்து அதிா்ச்சி அடைந்தாா். இதனையடுத்து நல்லிபாளையம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டபோது வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராக்கள் துணியால் மறைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கீரம்பூா் சுங்கச் சாவடியை காா் கடந்து சென்றதும் தெரியவந்துள்ளது. அப்பகுதியில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

