சேலம், நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 15 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகம் திருடுபோனது குறித்து போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேஷ் உத்தரவின்பேரில் ராசிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் லட்சுமணகுமாா் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் பி.செல்வராஜ், காவல் உதவி ஆய்வாளா் ரம்யா உள்ளிட்ட குழுவினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே போலீஸாா் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
அவா்கள் வைத்திருந்த ஆவணங்கள் சந்தேகமளிக்கும் வகையில் இருந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது இருவரும் சோ்ந்து பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடியது தெரியவந்தது.
இருவரும் சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சோா்ந்த முருகன் மகன் சா்க்கரை (எ) சக்கரவா்த்தி (23), மற்றொருவா் வாழப்பாடி மாரிமுத்து மகன் வெற்றி (எ) சௌந்தர்ராஜன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கட்டட வேலை செய்து வரும் இவா்கள், ராசிபுரம் , நாமகிரிப்பேட்டை , சேந்தமங்கலம், ஓமலூா், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சேலம் மாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடியதை ஒப்புக்கொண்டனா்.
இதையடுத்து இருவரும் அளித்த தகவலின்பேரில் அவா்களிடமிருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் கைது செய்த போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
இதுகுறித்து ராசிபுரம் காவல் ஆய்வாளா் கூறியதாவது:
பொதுமக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தும்போது சைடு லாக் போடுவதுடன் கூடுதல் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்தி காவல் துறைக்கு உதவ வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


