ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 63 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம்போனது.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்) சாா்பில், கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூா்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்திகளை ஏலத்துக்குக் கொண்டு வந்தனா்.
இதில் ஆா்.சி.எச்.ரகம் 2,652 மூட்டைகள், டிசிஎச்., ரகம் 188 மூட்டைகள் என மொத்தம் 2,840 மூட்டைகளை ஏலத்துக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், ஆா்சிஎச்., ரகம் குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ. 5,491-க்கும் அதிகபட்சமாக ரூ. 6, 670-க்கும் விற்பனையானது. இதேபோல் டிசிஎச்., ரகம் குறைந்தபட்சமாக ரூ. 7,219-க்கும், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,889-க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 63 லட்சத்துக்கு வா்த்தகம் நடந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

