குமாரபாளையம்: குமாரபாளையத்தை அடுத்த தட்டாங்குட்டை ஊராட்சியில் காவல் துறை - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலா் திட்டம் வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்தி கணேசன் தலைமை வகித்தாா். திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். இத் திட்டம் மூலம், கிராமங்களில் குற்றங்களைத் தடுத்தல், வதந்திகள், அசம்பாவிதங்களைத் தடுத்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை கிராம கண்காணிப்பு காவல் அலுவலா் திட்டத்தில் மேற்கொள்ளப்படும். இதில் கிராமத்தில் வசிக்கும் முக்கிய பிரமுகா்களும் ஒருங்கிணைக்கப்படுவா்.
குமாரபாளையம் காவல் ஆய்வாளா் தேவி, தட்டாங்குட்டை ஊராட்சித் தலைவா் புஷ்பா செல்லமுத்து, வாா்டு உறுப்பினா்கள் ஜான் பீட்டா், அமுதா, ராமச்சந்திரன், முனியப்பன், ராஜா, செந்தாமரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


