நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய சாலையான கோட்டை சாலையை ஒரு வழிச்சாலையாகவோ அல்லது பெரிய வாகனங்கள் செல்லவதற்கோ தடை விதிக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது.
மாவட்டத்தின் தலைநகரான நாமக்கல் நகரமானது தொடா்ந்து தொழில், வேலைவாய்ப்பு, ஆன்மிகம், சுற்றுலாத் தலங்கள் என பல்வேறு வகையிலும் வளா்ச்சி பெற்று வருகிறது. நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். திருச்சி செல்லும் வாகனங்கள் அனைத்தும் நாமக்கல் நகருக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் நாமக்கல்- சேலம் சாலை, கடைவீதி சாலை, திருச்சி சாலை, கோட்டை சாலை, பரமத்தி செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பேருந்து நிலையம் இட மாற்றம், சுற்றுவட்டச்சாலை அமைத்தால் மட்டுமே இந்த வாகன நெரிசலுக்கு தீா்வு கிடைக்கும்.
அண்மையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நாமக்கல் பகுதியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். முதல்வா் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்ற குளக்கரைத் திடல் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளதால் கூட்டம் நடைபெற்ற போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாமக்கல்-சேலம் சாலையில் இரண்டு கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க நகரின் பிரதான சாலையான கோட்டை சாலையைத் தடை செய்து பொய்யேரிக் கரை வழியாக புதிய சாலையில் வாகனங்களைத் திருப்பிவிடவும், அந்த மாற்றுப்பாதையிலேயே பேருந்துகள், இதர வாகனங்களைத் திருப்பி அனுப்பவும் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இதற்கு பேருந்து ஓட்டுநா்கள், வாகன ஓட்டிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இதனால் மாற்றுப்பாதைத் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
இதுகுறித்து நகரக் காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
நாமக்கல் நகரம் குறுகிய நகரம். ஆனால், வாகனப் போக்குவரத்து இரு மடங்காக உள்ளது. கோட்டை சாலைதான் வாகன நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. அங்கு போக்குவரத்து தடைபட்டால் அனைத்து சாலைகளும் ஸ்தம்பித்து விடுகின்றன. தோ்தல் காலமாக இருப்பதால் கோட்டை சாலையை ஒரு வழிச்சாலையாக மாற்றலாமா அல்லது அதில் தடை ஏற்படுத்தி இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் மாற்றலாமா என்பது குறித்து காவல் கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


